

புதுக்கோட்டை, தஞ்சை உள் ளிட்ட 5 மாவட்டங்களில் ரூ.30.10 கோடியில் புதிய அணைக்கட்டு கள் கட்டப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
புதுக்கோட்டையில் வெள்ளாற் றின் குறுக்கே ரூ.8 கோடியிலும் தஞ்சையில் ரூ.3.65 கோடியில் நரியாற்றின் குறுக்கிலும், சிவ கங்கையில் மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியிலும் திருவண்ணாமலை செய்யாற்றின் குறுக்கில் ரூ.6.65 கோடியிலும் புதிய அணைக்கட்டுகள் அமைக் கப்படும். திண்டுக்கலில் அஞ்சன காரன் குளம் அணைக்கட்டு ரூ.1.80 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும்.
தடுப்பணைகள்
திண்டுக்கல் கொடகனாறு ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடி யிலும், திருவள்ளூர் புட்லூர் அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.6.50 கோடியிலும், விருதுநகரில் வைப்பாற்றின் குறுக்கே ரூ.5.60 கோடியிலும் தடுப்பணைகள் கட்டப்படும். மேலும், தூத்துக்குடியில் வைப்பாற் றின் குறுக்கில் ரூ.9.20 கோடியிலும், கடலூரில் கெடிலம் ஆற்றில் ரூ.5 கோடியிலும் தடுப்பணைகள் கட்டப்படும். கரூர், கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சையில் வழங்கு கால்வாய், ஊட்டு கால்வாய்கள் ரூ.15.87 கோடியில் அமைக்கப்படும்.
புதிய பாலங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் பரமன் கேணி கிராமம் அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கில் உள்ள பாலம் ரூ.9.97 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும். புதுக்கோட்டை, மதுரை, கன்னியாகுமரி, தருமபுரி, திருவள்ளூரில் ரூ.6.69 கோடியில் தரைப்பாலங்கள் கட்டப்படும்.
திருச்சி மாவட்டம் மண்ணச் சநல்லூர் பங்குனி வடிகாலின் குறுக்கே அத்தானி மற்றும் கூத்தூர் படுகை அணைகள் ரூ1.70 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும். தஞ்சை மாவட்டம் மணஞ்சேரி கிராமத்தில் காவிரி ஆற்றில் ரூ.1.47 கோடியில் படுகை அணை கட்டப்படும்.
திருப்பூர் நெழலிக்கரை ஓடை குறுக்கில் ரூ.2.18 கோடியிலும், பாலாற்றின் குறுக்கில் ரூ.2.21 கோடியிலும், உப்பாறு ஓடை யின் குறுக்கில் ரூ.1.92 கோடி யிலும் தடுப்பணைகள் கட்டப் படும். கோவை மாவட்டம் சங்கனூர்ப்பள்ளம் ஓடை குறுக்கில் ரூ.1.19 கோடியிலும், செஞ்சேரிபுதூர் கிராமத்தில் ரூ.1.25 கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்படும். தேனி மாவட்டத் தில் வைகை ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகள் ரூ.6 கோடியில் கட்டப்படும்.
அரியலூர், தேனி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.10.80 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி பகுதிகளிலும் உள்ள ஆறுகளின் குறுக்கே புதிய ரெகுலேட்டர்கள், பழைய ரெகுலேட்டர்கள் மறு கட்டுமானப் பணிகள் ரூ. 7.75 கோடியில் மேற்கொள்ளப்படும்
பாசன கட்டுமானங்கள்
நெல்லை, நாகை, திருப்பூர், விருதுநகர், தேனி, கோவை, திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பாசன கட்டுமானங்கள் மற்றும் பாசன அமைப்புகள் ரூ.45.09 கோடியில் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.
திண்டுக்கல் தொலிக்கம்பட்டி கண்மாய், தேனி சிறுகுளம், நாராயண சமுத்திரம் கண் மாய்கள் ரூ.1.85 கோடியில் புனரமைக்கப்படும். கிருஷ்ணகிரி பாரூர் கிழக்கு பிரதான கால்வாயில் புதிய கால்வாய் திட்டத்துக்கு விரிவான ஆய்வு செய்து முதல்கட்ட பணிகள் ரூ.13.70 கோடியில் மேற்கொள்ளப்படும்.
புதிய கால்வாய்கள்
தேனி மாவட்டம் தொட்டமாந் துறையில் ரூ.10 லட்சத்திலும், கிருஷ்ணகிரியில் வாணியாறு நீர்த்தேக்க திட்டத்தில் இருந்து புதிய கால்வாய் அமைக்க ரூ.40 லட்சத்திலும், சூளகிரி சின்னார் ஆறு, பெண்ணையாற்றுடன் கலக்கும் இடத்தில் நீர்த்தேக்கம் அமைக்க ரூ.10 லட்சத்திலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. புதுக்கோட்டை, நாமக்கல், மதுரை, சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.