

ரூ.7 கோடி நிதி முறைகேட்டில் ஈடு பட்டதாகக் கூறி, கலாக்ஷேத்ரா முன்னாள் நிர்வாகியும், பரத நாட்டிய கலைஞருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் 84 ஆண்டுகள் பழமையான கலா க்ஷேத்ரா நிறுவனம் உள்ளது. மத்திய கலாச்சாரம் மற்றும் பண் பாட்டுத் துறையின்கீழ் இந்நிறு வனம் செயல்படுகிறது. அங்கு 1985-ம் ஆண்டு ‘கூத்தம்பலம்’ என்ற அரங்கு கட்டப்பட்டது. இந்த அரங் கில் ஏசி வசதி, ஒலி - ஒளி மற்றும் நவீன வசதிகள் செய்வதற்கும், அரங்கை சீரமைக்கவும் மத்திய அரசிடம் நிதி கேட்டு கலாக்ஷேத்ரா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் சார் பில் ரூ.7 கோடி நிதி வழங்கப்பட் டது. இதைத் தொடர்ந்து ‘கூத்தம் பலம்’ அரங்கில் 28 வகையான சீர மைப்பு பணிகள் செய்வதற்கு ‘கார்டு’ என்ற நிறுவனத்துக்கு டெண் டர் கொடுக்கப்பட்டது. அதன்படி பணிகளும் செய்து முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ‘கூத்தம்பலம்’ அரங்கில் செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து சிஏஜி (மத்திய கணக்காயர்கள்) ஆய்வு செய்த போது, ரூ.7 கோடி நிதியில் ரூ.62 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என் றும், ‘கார்டு’ நிறுவனத்துக்கு ஒப் பந்தங்கள் வழங்கியதில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை என்றும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கலாக்ஷேத்ரா நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் சிபிஐயிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி கலா க்ஷேத்ராவின் அப்போதைய இயக் குநர் லீலா சாம்சன், துணை இயக் குநர் கருணாகரன் கே.மேனன், தலைமை கணக்காயர் டி.எஸ்.மூர்த்தி, கணக்கர் ராமச்சந்திரன், பொறியாளர் சீனிவாசன், ‘கார்டு’ நிறுவன உரிமையாளர் உள்ளிட் டோர் மீது வழக்குப் பதிவு செய் துள்ளனர். பத்மஸ்ரீ விருது பெற்ற வரான லீலா சாம்சன் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராகவும் இருந்தவர் என் பது குறிப்பிடத்தக்கது.