

கி.ஜெயப்பிரகாஷ்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தின் மின்சார செலவை 40 சதவீதம் வரை குறைக்கும் விதமாக, காற் றாலை, சோலார் மின்சாரத்தை அதிக அளவில் வாங்க திட்டமிடப் பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயிலில் ஏ.சி., ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, வைஃபை, ரயில் நிலைய கூரை யில் சோலார் தகடுகள் அமைத்து மின்உற்பத்தி என பல புதிய திட்டங் களையும் மெட்ரோ ரயில் நிறுவனம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோ ரயில்களில் தற் போது குறைந்தபட்சமாக ரூ.10, அதிகபட்சமாக ரூ.60 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்கள் விரைவாக பயணம் செய்யவும் மெட்ரோ ரயில் கட்டணத்தை கணிச மாக குறைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கூறி வருகின் றனர். இதைத்தொடர்ந்து, விடு முறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குறைந்த கட்டணத்தில் இணைப்பு வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மின்சார செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், காற் றாலை, சோலார் மின்சாரத்தை வெளிச்சந்தையில் அதிக அளவில் வாங்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தினசரி செலவில், ரயில் இயக்கம், ஏ.சி., லிஃப்ட், எஸ் கலேட்டர் உள்ளிட்டவற்றுக்கான மின்சார செலவே சுமார் 50 சத வீதம் வரை ஆகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு 110 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறோம். இதில், நாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் 11 மில்லியன் யூனிட் தவிர, மீதியை தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் வாங்குகிறோம். மெட்ரோ ரயில்கள் இயக்குவதற் கான மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6.35-க்கும், ஏடிஎம், உணவகம் உள்ளிட்ட வசதிகளுக்கான மின்சா ரத்தை ஒரு யூனிட் ரூ.8-க்கும் மின்சார வாரியத்திடம் வாங்கு கிறோம்.
இதற்கிடையே, வெளிச் சந்தை யில் குறைந்த கட்டணத்தில் சோலார், காற்றாலை என புதுப்பிக் கத்தக்க மின்சாரம் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 72 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் அல்லது 90 மில்லியன் யூனிட் சோலார் மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளோம்.
ஒரு யூனிட் ரூ.3.50 என்ற கட்ட ணத்தில் வாங்க திட்டமிட்டுள் ளோம். அடுத்த சில மாதங்களில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் வாங்கு வது இறுதி செய்யப்படும். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொத்த மின் பயன் பாட்டில் சுமார் 80 சதவீதம் புதுப் பிக்கத்தக்க மின்சாரமாக இருக்கும். இதனால், மொத்த மின்சார செலவு 40 சதவீதம் வரை குறையும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.