

மாநில தேர்தல் ஆணையர் ஆர். பழனிச்சாமி, தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம், மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங் ஆகியோருக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அனுப்பியுள்ள நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்:
2011 மக்கள் தொகை அடிப்படை யில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சட்டப் பூர்வமாக முடித்து 3 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுப்படி இடஒதுக்கீடு, சுழற்சி முறைகளை மாநில தேர்தல் ஆணையம் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2011 மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறைகள் வழங்கப்பட வில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த டிச.11 அன்று பிறப்பித்த உத்த ரவு நகல் மறுநாள் மதியமே இணை யத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால் மாநில தேர்தல் ஆணை யம் அவசரகதியில் டிச. 11 அன்றே அந்த உத்தரவை வெளியிட்டு, செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை, இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி உள்ளிட்ட சட்ட ரீதியிலான பணிகளை முடித்தால் மட்டுமே மாநிலம் முழுவதும் உள்ள 36 மாவட் டங்களிலும் உள்ள மொத்த பதவி களை கருத்தில் கொண்டு இடஒதுக் கீடு மற்றும் சுழற்சி பணிகளை மேற் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் எந்தப்பணியையும் செய்யவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அதில் அவர் தெரிவித்துள்ளார்.