Published : 15 Dec 2019 07:57 AM
Last Updated : 15 Dec 2019 07:57 AM

அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

அடையாறு ஆற்றில் நடைபெற்ற மறு சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணைய ரும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினருமான கோ.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

அடையாறு, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியிலிருந்து வழிந்தோடி 42 கி.மீ. பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. இது தவிர நந்திவரம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், மணிமங்கலம், படப்பை, தாம்பரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரும் வழிந் தோடி அடையாற்றில் கலக்கிறது. இந்நிலையில் அடையாறு ஆற்றினை மீட்டெடுக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆதனூர் முதல் திருநீர்மலை வரை 19 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சமீபத்தில் பெய்த மழையினால் புறநகர் பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அடையாறு ஆற்றில் செய்யப்பட்ட பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாக ஆணையரும்,சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினருமான பிரகாஷ், ஆதனூர், பெருங்களத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடையாறு ஆறு சீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அடையாறு மறு சீரமைப்புக்கு செய்ய வேண்டிய பணிகளின் விவரங்களையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை நீர் செல்வதில் சிக்கல்

அதன்படி, அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் உள்ளிட்ட சில இடங்களில் ஷட்டர் அமைக்கவும், ஆற்றை ஒரு அடி ஆழப் படுத்தவும், ஆற்றின் பாதை சில இடங்களில் இடத்தில் குறுகலாக இருப்பதினால் மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த குறுகிய இடத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஆற்றை அகலப்படுத்த வேண்டும் என பொதுபணித் துறையினர் ஆலோ சனை தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, காஞ்சி மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணா, உதவி பொறியாளர் தே.குஜ்ராஜ் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x