Published : 15 Dec 2019 07:20 AM
Last Updated : 15 Dec 2019 07:20 AM

27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: வரும் 25-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்

சென்னை / மதுரை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடை பெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இதனால் கடைசிகட்ட வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த டிச.2-ம் தேதி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ கத்தில் 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித் தது. இதனால், முறையாக வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலை அறி விக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

9 மாவட்டங்கள்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்த புது அறிவிப்பாணை வெளியிட மாநில தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரை யறை செய்து தேர்தல் நடத்த வேண் டும். 9 மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் தேர்தலை நடத்துமாறும் அந்த உத்தர வில் தெரிவித்தது. இதுதவிர உள் ளாட்சித் தேர்தலுக்கு எதிராக விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் என 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர் தல் நடத்துவது தொடர்பாக மறுஅறி விப்பை கடந்த 7-ம் தேதி மாநில தேர் தல் ஆணையர் ஆர்.பழனிசாமி வெளி யிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. 27 மாவட் டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட் பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 43,528 பெண்கள், 1 கோடியே 28 லட்சத்து 25,778 ஆண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1,635 பேர் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி யது. கடந்த 5 நாட்களாக வேட்புமனுக் கள் பெறப்பட்டு வரு கின்றன.

இதன்படி, நேற்று மாலை வரை கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிகளுக்கு 1,15,814 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 35,464 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி களுக்கு 13,117 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி களுக்கு 1,264 பேர் என மொத்தம் 1 லட்சத்து 65,659 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

இதற்கிடையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர்கள் கட்சி அடிப்படையில் நிறுத்தப்படுவதால், அதிமுக சார்பில் கட்சி அடிப்படையில் பிரிக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதேபோன்று திமுக சார்பில் கட்சி அடிப்படையிலான 14 மாவட் டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால், அன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இதனால் கடைசி நாளான நாளை அதிகப்படியான வேட்புமனுக்கள் தாக்கலாக வாய்ப்பு இருக்கிறது.

மனுக்கள் பரிசீலனை

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக் கள் வரும் 17-ம் தேதி பரிசீலிக்கப்படு கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 19-ம் தேதி கடைசி நாளாகும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை நேர்மையாக நடத்துவது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாநில தேர் தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் வேட்புமனுக்கள் நடுநிலையோடு பரிசீலனை செய்யப் படுவதை தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத் தியுள்ளார்.

டாஸ்மாக் கடைகள்

இதனிடையே முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிச.27-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. விதிகளின்படி, பிரச்சாரம் நிறைவடையும் 25-ம் தேதி மாலை முதல் 48 மணி நேரத்துக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் 28-ம் தேதி மாலை முதல் 48 மணி நேரம் மதுக்கடைகளை மூட வேண்டும். ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாலும் அம்மாவட் டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி களில் தேர்தல் நடைபெறாததாலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுக் கடைகளை மூடுவதற்கு பதிலாக, மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை மூடுவது சரியாக இருக்குமா என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஆலோசித்து வருகின்றன. இக்கருத்து ஒருமனதாக ஏற்கப்பட்டால் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x