Published : 14 Dec 2019 09:34 PM
Last Updated : 14 Dec 2019 09:34 PM

இந்தியா-மே.இ.தீவு ஒருநாள் கிரிக்கெட்: போக்குவரத்து மாற்றம் என்ன?- சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு

இந்திய- மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் வாகனங்கள் எப்படி வருவது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட விபரங்களை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா மற்றும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 1வது ஒரு நாள் பகல் / இரவு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நாளை (15.12.2019) அன்று நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்ட சாலைகளில் அன்று 12.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1. பெல்ஸ் சாலை: இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை செய்தும், செயல்படுத்தப்படும். கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன், அதாவது வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. பாரதி சாலை : காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி பேருந்துகள் வாகனங்கள் மற்றும் உரிய அனுமதி சீட்டு ஒட்டப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

3. கெனால் சாலை: இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை செய்தும், செயல்படுத்தப்படும்.

4. வாலாஜா சாலை: அண்ணா சாலையில் இருந்து வரும்; M,P,T,W எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும். B kw;Wk; R எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் பெல்ஸ் சாலை செல்லாமல் அவ்வாகனங்கள் MRTS மற்றும் பட்டாபிராம் நுழைவாயில் சென்று வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.

5. கடற்கரை காமராஜர் சாலை : போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலையில் இருந்து வரும்; M,P,T,W எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப்பேருந்து வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்லலாம், மற்ற வாகனங்கள் PWD அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

6. அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள் :

அ) அண்ணா சாலையில் இருந்து வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை சென்று கடற்கரைச் சாலையிலும் சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.

ஆ) போர் நினைவு சின்னம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும் சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.

இ) காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் வழியாக சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும் சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.

வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு சென்னை போக்குவரத்துப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x