Published : 14 Dec 2019 04:13 PM
Last Updated : 14 Dec 2019 04:13 PM

பலவீனமான வார்டுகள் கூட்டணிகளுக்கு ஒதுக்கீடு: திமுகவுக்கு எதிராக கொடிபிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்

தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு பலவீனமான வார்டுகளை அக்கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளன.

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள ஊரகப்பகுதி உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

அதிமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடக்கூடிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியானது.

திமுக அதன் தலைமையில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளுக்கு ‘சீட்’கள் ஒதுக்கீடு செய்வது சம்பந்தமான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தற்போது திமுகவில் திருவண்ணாமலை வடக்கு,திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடனான முழுமையான பேச்சுவார்த்தை, அவர்களுக்கான போட்டியிடும் இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்த மாவட்டங்களில் இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. மற்ற மாவட்டங்களிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரளவு முடிந்துவிட்டது. ஆனால், அனைத்து மாவட்டங்களிலுமே சொல்லி வைத்தார்போல், திமுக பலவீனமான வார்டுகளை அக்கட்சி ஒதுக்கியுள்ளதாக கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக முக்கிய கட்சிகளாக உள்ளன. இந்த கட்சிகளுக்கு போதுமான ‘சீட்’கள் ஒதுக்கப்படவில்லை என்றும் அக்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

திமுக, ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக்குழு தலைவர் மறைமுக தேர்தல் வந்தால் அதில் தலைவரை திமுகவே தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு உள்ளாட்சிகளிலும் அதிகமான இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

மீதமுள்ள இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு திமுக விட்டுக் கொடுத்துள்ளது. அதுவும், அதிமுக வலுவாக இருக்கும் வார்டுகளை ஒதுக்கியுள்ளதாக கூட்டணி கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சியினர் புலம்பல் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சியினர் கூறுகையில், ‘‘அதிமுகவை ஒப்பிடும்போது திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது. மக்களவைத்தேர்தல் போல், திமுக கூட்டணி பெரும்பான்மை உள்ளாட்சிப்பதவிகளை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

ஆனால், திமுக கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களையும், வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை அனுசரனையாக நடந்து கொள்ளவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் வேறு வழியில்லாமல் திமுக தலைமை பற்றி விமர்சனம் செய்யவில்லை.

ஆனால், ஆங்காங்கே மாவட்டங்களில் மாவட்ட திமுக தலைமைக்கும், கூட்டணி கட்சி தலைமைகளுக்கும் முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. தேர்தல் நேரத்தல் அவர்கள் எப்படி திமுகவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பது தெரியவில்லை, ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x