Published : 14 Dec 2019 03:55 PM
Last Updated : 14 Dec 2019 03:55 PM

164 வயதான தொன்மையான நீராவி இன்ஜின் ரயில் சென்னையில் இயக்கம்

சென்னையில் பழமையின் பெருமையை பறைசாற்றும் வகையில் 164 ஆண்டுகள் பழமையான நீராவி இன்ஜின் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இன்று ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டது.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில், நீராவியால் இயங்கும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை சென்னை மக்களுக்கு அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, நீராவி இன்ஜின் ரயில், எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (டிச.14) காலை 11 மணிக்கு தன்னுடைய முதல் பயணத்தைத் தொடங்கியது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த ரயில் ஒரே நாளில் 4 முறை இயக்கப்பட்டது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள்

பெரியவர்களுக்கு ரூ.500, சிறியவர்களுக்கு ரூ.300, வெளிநாட்டு சுற்றுலா பெண்களுக்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.1,000 மற்றும் இரு வழி பயணத்திற்கு ரூ.1500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீராவி இன்ஜின் ரயில் பயணத்திற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x