

நித்யானந்தா தனது மடத்தின் சொத்துகளை காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமையான மடமான தொண்டை மண்டல ஆதீன மடத்தின் நன்மைக்கு செலவிடப்பட வேண்டும் என்று உயில் எழுதியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல மடம். இந்த மடத்தின் 232-வது ஆதீனமாக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். தொண்டை மண்டல முதலியார் சமூகத்தின் மடமாக இந்த மடம் இயங்கி வருகிறது.
இந்த மடத்தின் இளைய மடாதிபதியாக வருவதற்கு நித்யானந்தா முயற்சி செய்ததாக வும் கூறப்பட்டது. நித்யானந்தா பக்தர்கள் சிலர் இந்த மடத்தில் வந்து தங்கியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சர்ச்சை ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஓரிருவர் மட்டும் இந்த மடத்தில் தங்கியுள்ளனர். சிலர் அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங் களுக்கு முன் நித்யானந்தா தன் பக்தர்களிடம் இணையதளம் வழியாக பேசியதாக கூறப்படு கிறது. அப்போது அவர், “எனக்கு சில நேரங்களில் அண்ணா மலையை பார்க்க முடிய வில்லையே என்று தோன்றும். நான் எப்போது இறந்தாலும் எனது உடலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல மலையை சுற்றி எடுத்துச் சென்று, பிடதியில் வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டேன். எனது மடத்துக்கு பக்தர்கள் கொடுக்கும் பணமெல்லாம் என்னை வளர்த்த 3 குருபரம் பரையின் நன்மைக்குச் செலவிட வேண்டும்” என்று கூறிய அவர், அந்த மூன்றில் காஞ்சிபுரம் குருபரம்பரையையும் சேர்த்துள்ள தாக தெரிகிறது. இது தொடர்பா கவும் உயில் எழுதி வைத்து விட்டதாக அவர் தெரிவித்துள் ளார். இது தொண்டை மண்டல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொண்டை மண்டல மடத்தின் மடாதிபதி ஞானப் பிரகாச பரமாச்சாரிய சுவாமிகளிடம் கேட்டபோது, “நித்யானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நான் இது தொடர்பாக பேச விரும்பவில்லை” என்றார். பின்னர், நித்யானந்தா உயில் எழுதி வைத்ததாக கூறும் வீடியோவை காண்பித்து கேட்டபோது, “இந்த உயில் தொடர்பாக அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தெரிவித்தால்தான் என்ன எழுதி வைத்துள்ளனர் என்பது தெரியும். அந்த மடத்தின் சார்பில் ஏதாவது கொடுத்தால், அடியார்கள் ஏதேனும் கொடுத்தால் பெற்றுக்கொள்வது போல் பெற்றுக்கொள்வோம்” என்றார்.