ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் மத்திய அரசு பணிக்கு மாற்றம்: நிதித்துறை (செலவினம்) செயலாளரானார்

டி.வி.சோமநாதன்
டி.வி.சோமநாதன்
Updated on
1 min read

தமிழக வணிகவரித் துறை ஆணையராக பணியாற்றி வரும் டி.வி.சோமநாதன், மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, நிதித் துறையின் செலவின பிரிவு செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.

பல்வேறு துறைகளில் பணி யாற்றி வந்த ஐஎஎஸ் அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசின் பணி யாளர் நியமனக் குழு நேற்று இடமாற்றம் செய்தது. இதில் இருவர் தமிழக பிரிவு அதிகாரி களாவர்.

வணிகவரி துறை ஆணையராக..

தமிழக வணிகவரித் துறை ஆணையராக பணியாற்றி வரும் டி.வி.சோமநாதன், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், மத்திய நிதித்துறையின் செலவின பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1987-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் வரை மத்திய அரசுப் பணியில், அதாவது பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார்.

பின்னர், மாநில அரசுப் பணிக்கு வந்ததும் முதலில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வணிகவரித் துறை ஆணையராக பணியாற்றி வந்தார்.

இதுதவிர, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், தொழில் நுட்ப கவுன்சில் இயக்குநராகவும் பணியாற்றிய பிரவீண்குமார், கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியில் உள்ளார்.

தற்போது புதிய மற்றும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தித் துறை சிறப்பு செயலராக உள்ள பிரவீண் குமார், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை யின் செயலராக நியமிக்கப்பட் டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபரில் மத்திய அரசு செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுப் பணியில் இருக்கும் மேலும் 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று செயலர் அந்தஸ்து வழங் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in