Published : 14 Dec 2019 08:50 AM
Last Updated : 14 Dec 2019 08:50 AM

உள்ளாட்சித் தேர்தல் பணிகளால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு டிசம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல் 

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக் காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது டிச.16-ல் இருந்து 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் கடந்த செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டு நவ.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படும். அதன்பின், இரண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

இதற்கிடையில், ஊரக உள் ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக் கப்பட்டதால். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்த லுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 16-ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கெனவே, நவ.30-ம் தேதி யுடன் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் சரிபார்த்தல் மற்றும் திருத்தத்துக்கான இணைய பதிவு முடிந்துவிட்டது. ஆனால், உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பின் அடிப்படையில், வேட்பு மனுத் தாக்கல் நிறைவு நாளான டிச.16-க்கு முன் 10 நாட்கள் அதாவது டிச.6-ம் தேதி வரையில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தலை அனுமதிக்க வேண்டும்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைப்படி, இந்திய ஆணையத்தின் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டிச.6-ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பெயர் சேர்த்தல், திருத்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, பதிவு செய்யும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு ஒருசில தினங்களில் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும். இதை முன்னிட்டே, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு டிச.16-லிருந்து டிச.23-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, டிச 21, 22 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யிருந்தது. ஆனால், தற்போது இந்த தேதியையும் மாற்ற இந்திய தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.பிப்ரவரியில் இறுதி பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.23-ம் தேதி வெளியிடப்பட்டதும், அன்றிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அவை பரிசீலிக்கப்பட்டு பிப்.3-ம் தேதிக்குள் பட்டியல் சீரமைக்கப்படும்.

பிப்.11-க்குள் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

பிப்ரவரியில் இறுதி பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.23-ம் தேதி வெளியிடப்பட்டதும், அன்றிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அவை பரிசீலிக்கப்பட்டு பிப்.3-ம் தேதிக்குள் பட்டியல் சீரமைக்கப்படும்.

பிப்.11-க்குள் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x