

திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப் பட்டதாக சமூக வலைதளங் களில் தகவல் வெளியாகி உள்ளது.
எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் 1,500 வாக் காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சி, பொதுப்பிரிவு பெண் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் பட்டதாரி இளைஞர்களுக்குப் பயன்படும் வகையில் போட்டித் தேர்வு மையம் கட்ட வேண்டும் என்பதற்காக ஊராட்சித் தலை வர் பதவியை ரூ.15 லட்சம் தருபவர்களுக்கு விட்டுக் கொடுப்பதாக ஊர் முக்கியஸ் தர்கள் தெரிவித்தனர்.
பொது வேட்பாளர்
இதற்காக கடந்த 2 தினங் களுக்கு முன் எடமேலையூர் பிள்ளையார் கோயிலில் கூட் டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதே ஊரைச் சேர்ந்த சித்ரா ராமச்சந்திரன் என்பவர் ரூ.15 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து பொது வேட்பாளராக சித்ரா ராமச்சந்திரன் ஊர்மக்கள் சார்பில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகவல் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு வேட்பாளர்
இதனிடையே, நேற்று சித்ரா ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலை யில், அதே ஊரைச் சேர்ந்த சரவணன் மனைவி ராஜேஸ்வரி என்பவரும் ஊராட்சித் தலைவர் பதவிக் காக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பிருக் காது என்ற நிலை உரு வாகியுள்ளது.