

இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு வித்திட்டவர் விஸ்வநாதன் ஆனந்த் என்று ‘இந்து'என்.ராம் தெரிவித்தார்.
செஸ் சாம்பியன் பட்டத்தை5 முறை பெற்ற ‘கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் தான் பெற்ற அனுபவங்
களை பத்திரிகையாளர் சூசன்நினான் உடன் இணைந்து ‘மைண்ட்மாஸ்டர்' என்னும் நூலாக எழுதிஉள்ளார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளதாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் ‘இந்து' என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். அதன் பின்னர்விஸ்வநாதன் ஆனந்த் மற்றும்‘இந்து' என்.ராம் இடையிலான கலந்துரையாடல் விவாதக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது:
இந்த நூல் 2 ஆண்டு கடின உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமான பயணமாக
இருந்தது. செஸ் விளையாட தொடங்கியது முதல் நான் பெற்றஅனுபவங்களை மீண்டும் ஒருமுறைநினைவுகூரும் அற்புத வாய்ப்பை இந்த புத்தகம் எனக்கு வழங்கியது. எனது அனுபவங்கள் செஸ்விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பின
ருக்கும் உதவியாக இருக்கும்.
செஸ் விளையாடும்போது காய்களை மிக வேகமாக நகர்த்தி விடுகிறேன். இதுவே என்னுடைய பலமாகவும் பலவீனமாகவும் கருது
கிறேன். இதை தவிர்த்து சரியாக கணித்து விளையாடுவதற்கு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தற்போது வெற்றி பெறும் தருணங்களில் கூட பொறுமையாக விளையாட குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.
செஸ் விளையாட்டைப் பொறுத்தவரையில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. தற்போது இளம்பெண்கள் நிறைய பேர் வளர்ந்து வருகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் கணினி மற்றும் இணை
யதள வளர்ச்சியின் காரணமாக செஸ் விளையாட்டு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த செஸ் வீரரான கார்ல்சன் என்னுடைய உதவியாளராக இருந்தவர். அதனால் என்னுடைய நுணுக்கங்களை எளி
தாக அறிந்து எனக்கு எதிராக நன்றாக விளையாடுகிறார். இருவருக்குமே எங்களின் பரஸ்பர உத்திகள் பற்றிய புரிதல் உள்ளது.
நான் என் வாழ்க்கையில் பெற்றபடிப்பினைகள் வெற்றி தோல்விகளை சமமாக பாவித்து அடுத்தகட்டத்துக்கு முன்னேறிச் செல்வ
தற்கு ஏதுவாக இருக்கின்றன. இந்தப்நூலை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் செஸ் விளையாட்டில் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, திறம்பட விளையாடுவதற்கு என் அம்மாதான் உறுதுணையாய் இருந்தார்.
இவ்வாறு விஸ்வநாதன் ஆனந்த் பேசினார்.
கலந்துரையாடலில் ‘இந்து' என்.ராம் பேசியதாவது:
இந்தியாவில் செஸ் வளர்ச்சிக்கு வித்திட்டவர் விஸ்வநாதன் ஆனந்த். 1987-ல் முதல்முறையாக இவர் இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பின்னர்தான் நம்நாட்டில் செஸ் விளையாட்டின் மீதான கவனம் எழத் தொடங்கியது. இந்தியாவில் இதுவரை 65 பேர் கிராண்ட் மாஸ்டர்பட்டம் பெற்றுள்ளனர். அதில், 40பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்தின் தாக்கமே
இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 5 முறை உலகச் சாம்பியன்பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ஒவ்வொரு காலக்கட்டத்
திலும் தான் பெற்ற அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். இந்தநூல் இதர மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.