

பணிக்குச் செல்லும் பெண் போலீ ஸாரின் குழந்தைகளை பராமரிக் கும் குழந்தைகள் நல காப்பகத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று புதிதாக திறந்து வைத்தார்.
பணிக்குச் செல்லும் பெண் போஸீ ஸார் பலர் தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. குழந்தை களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடியாமல் தவித்து வந்தனர். இதை சரிசெய்யும் வகையில் பணிக்குச் செல்லும் பெண் போலீஸாரின் நலன் கருதி குழந்தைகள் நல காப்பகம் அமைக்க அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, 2003-ல் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத் தில் தற்காலிக கட்டிடத்தில் குழந்தை கள் நல காப்பகம் அமைக்கப்பட் டது. தற்போது புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம், ராஜரத் தினம் விளையாட்டு அரங்கத்தின் உள்ளே புதிதாக ரூ.69.79 லட்சம் மதிப்பில் தரை தளம், முதல் தளம் மற்றும் விளயாட்டு பூங்காவுடன் கூடிய குழந்தைகள் நலக்காப்பகம் அமைக்கப்பட்டுள் ளது. அனைத்துவிதமான வசதி களுடன் கூடிய இந்த காப்பகம் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த காப்பகம் தினமும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை இயங்கும். இந்த கட்டிடம் மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் நல காப்பக மாகவும் இயங்கும். குழந்தைகளை பராமரிக்கவும், ஆரம்ப பாடங் கள் கற்பிக்கவும் நன்கு படித்த பெண் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் குழந்தை களை கவனித்துக் கொள்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட 2 உதவியா ளர்கள் பணியில் உள்ளனர். இங்கு 50 குழந்தைகள் வரை வருகை தருவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வாநதன் தெரிவித்துள்ளார்.
நிகழச்சியில் காவல் தலைமையிட கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம், இணை ஆணையர் ஏ.ஜி.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.