ஒன்றரை மாதங்களாக சென்னை புறநகர் பகுதியை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்க வியூகம்

ஒன்றரை மாதங்களாக சென்னை புறநகர் பகுதியை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்க வியூகம்
Updated on
2 min read

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தென் சென்னைப் புறநகர் பகுதி மக்களை மீண்டும் ஒரு சிறுத்தைப் புலி அச்சுறுத்தி வருகிறது. அதனைப் பொறி வைத்துப் பிடிப்பதற்காக ஆனைமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட 8 கண் காணிப்பு கேமராக்களை வனத்துறை யினர் பல இடங்களில் வைக்கத் தொடங் கியுள்ளனர்.

பேராசிரியைப் பார்த்த புலி

சென்னை செங்கல்பட்டை சுற்றி யுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த ஒன் றரை மாதங்களாக சிறுத்தைப் புலி ஒன்று உலவி வருவதால் அப்பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கே அச்சப் பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். குறிப்பாக, செங்கல் பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதிகளில் அதன் நட மாட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரி கிறது. இந்த சிறுத்தைப் புலியின் நடமாட்டம் குறித்து கிராமவாசிகள் அவ் வப்போது தகவல் கொடுத்து வந்தாலும் ஒரு கல்லூரி பேராசிரியைதான் வனத் துறைக்கு முதன்முதலில் தகவல் கொடுத்தார்.

சிறுத்தை கால்தடங்கள்

இருப்பினும், அதன்பிறகு சில நாட்கள் கழித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பணி நிமித்தமாக செங்கல்பட்டு அருகே சென்றபோது சிறுத்தையை பார்த்து விட்டு வனத்துறைக்குத் தெரியப் படுத்தினார். அப்போது இருந்து சிறுத்தைப் புலியை வனத்துறையினர் தீவரமாக தேடத் தொடங்கினர். காஞ்சி புரம் வனப்பாதுகாவலர் சுவாமிநாதன், செங்கல்பட்டு வனச்சரகர் கோபு ஆகி யோர் சிறுத்தைப் புலியைப்பிடிக்க சிறப்புக் குழுக்களை அமைத்து கண் காணித்து வருகிறார்கள். இதற் கிடையே வருவாய் கோட்டாட்சி யரும், வனத்துறையினருடன் கிராமப் பகுதிகளுக்குச் சென்று தேடுதல் வேட்டையை கண்காணித்து வருகிறார்.

3 இடங்களில் கூண்டு

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருகுன்றம்பள்ளி மலைப் பகுதியை சேர்ந்த விவசாயி தட்சி ணாமூர்த்தி என்பவரின் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த சில ஆடுகளில் ஒன்று தாக்கப்பட்டு இறந்து கிடந் தது. காவலுக்கு நின்ற நாய்க்கும் ரத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத் துடன் இருந்து வருகிறார்கள்.

திருமணி வனப்பகுதியில் 12 அடி கொண்ட பெரிய இரும்பு கூண்டை வைத்து அதில் ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்தனர். ஆனால் அங்கு அது சிக்கவில்லை. இதற் கிடையே மணப்பாக்கம் பகுதியில் பாலாற்றங்கரையில் சிறுத்தையைப் பார்த்ததாக தகவல் வந்ததால், உதகை யில் இருந்து மேலும் இரண்டு கூண்டு களைக் கொண்டு வந்து, படவேலி, அனுமந்தபுத்தூர் பகுதிகளில் புல், தழைகளைக் போர்த்தி வைத்தனர். அவற்றினுள்ளே உயிருள்ள ஆடு வைக் கப்பட்டது. இருந்தபோதிலும், எதற்கும் சட்டை செய்யாமல் சிறுத்தைப் புலி அப்பகுதியில் ஒய்யாரமாக சுற்றி வருகிறது.

2002-ல் வண்டலூரில்…

கடந்த 2002-ம் ஆண்டில், வண்டலூர், கண்டிகை போன்ற பகுதிகளில் ஒரு சிறுத்தைப் புலி நடமாடியபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிறுத்தை, வண்டலூர் உயிரியல் பூங்கா வுக்குள் இரவு நேரத்தில் குதித்து, அங் குள்ள மான்களை வேட்டையாடி வந்தது. இதனால் பெருங்களத்தூர், வண்ட லூர், கண்டிகை, கீரைப்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் மக்கள் பெரும் பீதியடைந்தனர். அதன்பிறகு, ஒருவழி யாக அப்போதைய பூங்கா இயக்குனர் பி.சி.தியாகி, டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின நிறுவன அதிகாரிக ளின் ஆலோசனைகளைப் பெற்று பல மாதங்களுக்குப் பிறகு அதைப் பிடித்தார். அதன்பிறகு தற்போது, மீண்டுமொரு சிறுத்தை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

எங்கிருந்து வந்தது?

இப்பகுதியில் சிறுத்தைப் புலி உலவு வதை உறுதிப்படுத்தியுள்ளோம். இது, தாயிடமிருந்து பிரிந்து வந்திருக்கலாம். இந்த சிறுத்தை தனக்கென வாழிடம் தேடி வேலூர், திருவண்ணாமலை போன்ற வனப்பகுதிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம். வயதான சிறுத்தையாக இருந்தால், எளிதான இரை என்னும் வகையில் அது மனிதர்களைத் தாக்கும்.

இருப்பினும், இந்த சிறுத்தையின் வயது, அதன் பாலினம் மற்றும் நடமாட் டத்தைக் கண்காணிக்க பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு வந்து 8 இடங்களில் வைத்தி ருக்கிறோம். இதில், சிறுத்தைப் புலி இரவு நேரத்தில் நடமாடினால் கூட காட்சி கள் தெளிவாகப் பதிவாகிவிடும். அதை எப்படியும் விரைவில் பிடித்துவிடு வோம் என்றனர்.

மத்திய அரசு எச்சரிக்கை

செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதகாலமாக சுற்றித்திரி யும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத் துறையினர் 3 இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். அவற்றில் உயிருள்ள ஆடு மற்றும் நாய் ஆகியவற்றை இரையாக வைத்திருந்தனர். இதைய றிந்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், தமிழக வனத்துறையினரை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இறைச்சியை மட்டும் கூண்டுகளில் அதிகாரிகள் வைத்து சிறுத்தைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in