

‘இந்து தமிழ் திசை’நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் வரும் ஞாயிறன்று (டிசம்பர்-15) நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிகம் செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கும் வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் வரும் ஞாயிறன்று காலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம், ஐஏஎஸ், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 9773001174 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயரைக் குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதிவுசெய்து கொள்ளலாம்.