Published : 13 Aug 2015 08:48 AM
Last Updated : 13 Aug 2015 08:48 AM

முதுமலை, டாப்சிலிப்பில் யானைகள் தினம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வனவிலங்கு களை நேரடியாகக் கண்டு களிக்க வனத்துறை சார்பில் வாகனங்கள் இயக்கப் படுகின்றன. நபருக்கு ரூ.125 கட்டணமாக வசூலிக்கப்பட்டு ஒரு மணி நேரம் காட்டை சுற்றி காட்டுவர்.

வன விலங்குகளை கண்டு களித்தபின் மாலை 6 மணிக்கு வளர்ப்பு யானைகளுக்கு உணவூட்டும் நிகழ்ச்சி, வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் நடைபெறும். யானைகள் வரிசையாக நின்று உணவு உண்பதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பார்கள்.

இந்த முகாமில் நேற்று யானைகள் தினம் கொண்டாடப் பட்டது. மொத்தமுள்ள 27 யானைகள் வரிசையாக நிற்க வைக்கபட்டன.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சந்திரன் மற்றும் வனத்துறையினர், யானைகளுக்கு ராகி, அரிசி, கொள்ளு சாதத்துடன் பொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட உணவு களை வழங்கினர். இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.

பொள்ளாச்சி வனக் கோட் டத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் சின்னார் மற்றும் கோழிகமுத்தி ஆகிய இரண்டு இடங்களில் வனத்துறை யானைகள் முகாம்கள் உள் ளன. கோழிக முத்தி முகாமில் 15 யானை களும், சின்னார் முகாமில் 7 யானைகளும் யானைகள் தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்றன.

மாவட்ட வன அலுவலர் வி.அசோகன் தலைமையில் விழா நடைபெற்றது. யானை களுக்கு பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டன. சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, மலைவாழ் மக் களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x