அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகக் குறைந்து 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in