Published : 13 Dec 2019 07:48 AM
Last Updated : 13 Dec 2019 07:48 AM

திருப்பூர் ஏடிஎம் மையங்களில் இருந்து மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்லப்படும் ரூ.2000 நோட்டுகள் வங்கியில் ஒரே நாளில் ரூ.80 லட்சம் சேர்ப்பு

பெ.ஸ்ரீ னிவாசன்

திருப்பூரில் ஏடிஎம் மையங்களில் மக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப் பட்ட ரூ.2000 நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு கொண்டு சேர்க் கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு தனியார் வங்கிக்குரிய ஏடிஎம் மையங்களில் இருந்து மட்டும் நேற்று முன்தினம் ரூ.80 லட்சம் அளவுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கருப்பு பணத்தை ஒழிக்கும் முனைப்பில், 2016 நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக் கையை மத்திய அரசு மேற்கொண்டது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, மக்களிடமிருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்பட் டன. பழைய ரூபாய் நோட்டு களுக்கு பதிலாக, ரூ.2000 நோட்டு களும், ரூ.500 நோட்டுகளும் புழக் கத்தில் விடப்பட்டன.

புதிய ரூபாய் நோட்டுகள் உடனடி யாக பரவலாக கைகளுக்கு கிடைக் காததால், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந் தது. மேலும், தொழில்துறை உட்பட பல்வேறு தரப்பினரும் சிக்கல்களை எதிர்கொண்டனர். இத்தகைய சூழ லில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய மத்திய அரசின் நடவடிக்கை களால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தொழில் துறை மீண்டு வருகிறது.

இவை ஒருபுறமிருக்க, பணமதிப் பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட ரூ.2000 நோட்டு கள், கருப்பு பணமாக மீண்டும் குவிக்கப்பட்டுள்ளதாலும், எளிதில் கள்ள நோட்டுகளாக அதிகளவில் அச்சடிக்கப்படுவதாலும், அவற்றை மீண்டும் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு மத்திய அரசு திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக உறுதி செய் யப்படாத தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப, சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில், ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது.

இந்நிலையில், திருப்பூரில் குறிப் பிட்ட பிரபல தனியார் வங்கிக்கு உரிய ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.2000 நோட்டுகளை எடுத்து, மீண்டும் வங்கிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2000 நோட்டுகளுக்கு பதிலாக, ஏடிஎம் மையங்களில் ரூ.500 நோட்டு கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று முன்தினம் பகல் தொடங்கி நள்ளிரவு வரை ரூ.80 லட்சம் மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் மட்டும், அந்த வங்கிக்குரிய ஏடிஎம் மையங்களில் இருந்து, பணம் நிரப்பும் ஊழியர்களால் தனி யாக பிரித்தெடுக்கப்பட்டு வங்கிக் கிளைகளில் சேர்க்கப்பட்டு உள் ளன.

இதுகுறித்து மும்பையை தலை மையிடமாகக் கொண்டு, திருப்பூரில் 100 ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘அந்த தனியார் வங்கி மட்டும் ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.2000 நோட்டுகளை பிரித்தெடுத்து, வங்கிக் கிளைகளில் சேர்க்க கூறியுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் மட்டும் திருப்பூரில் அந்த வங்கிக் குரிய 20 ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில் ரூ.2000 நோட்டுகள் எடுக்கப்பட்டு வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, ரூ.500 நோட்டு களை வைக்க தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருப்பூரில் அந்த தனியார் வங்கி யின் ஏடிஎம் மையங்களில் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது. ஆனால், எதற்காக இந்த நடவடிக்கை என்பது தெரியவில்லை' என்றார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, ‘ரூ.2000 நோட்டு களை வங்கிகளுக்கு திரும்பக் கொண்டு வருவது குறித்து, ரிசர்வ் வங்கியிலிருந்து எந்தவித அதிகாரப் பூர்வ தகவலும் வரவில்லை. இருப் பினும், ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளி வருகின்றன' என்றார்.

சம்பந்தப்பட்ட தனியார் வங்கி, அவர்களது நிர்வாக வசதிக்காக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x