

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, திமுக எம்.பி. மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டுமென மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை நேற்று (டிச.11) நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்ததுடன், அமைச்சரே நேரில் ஆய்வு செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
இது தொடர்பாக டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் முழு நேர இயக்குநர் இல்லாத நிலையில் இயங்கி வருவதை தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு இளைஞர் நலன் துறைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர்களின் காலியிடங்கள், மற்ற பணிகளுக்கான காலியிடங்கள் உடனடியாக நிரப்பட வேண்டும் எனவும், தேசிய இளைஞர் கொள்கை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் வெளியிடப்பட வேண்டும் எனவும், நிரந்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை இந்நிறுவனத்தின் மேம்பாட்டைப் பாதிப்பதாகவும், போதிய நிதி ஒதுக்கப்படாததால், விளையாட்டு வசதிகள் முழுமையடையவில்லை எனவும், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் மேற்கண்ட பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு அக்கடிதத்தில் வலியுறுத்தியு=ள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இக்கோரிக்கையைப் பரிசீலிப்பதாவும், வருகிற ஜனவரி மாதம் நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்.