தமிழக - கேரள நதிநீர் பங்கீடு: இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகம் - கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு மாநில அதிகாரிகள் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

தமிழகம் - கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் மாதம் கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில், இன்று (டிச.12) இந்த குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்ப்படுகிறது.

பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற உள்ள கூட்டங்களில், பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு, நெய்யாறு, செண்பகவள்ளி நீர்வழிப்பாதை சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் மற்றும் நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன்பின்னர், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கேரளாவில் விரைவில் நடைபெறவிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in