Published : 12 Dec 2019 12:09 PM
Last Updated : 12 Dec 2019 12:09 PM

காரைக்குடி அரசு பேருந்தில் உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநர் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

காரைக்குடியில் அரசுப் பேருந் தில் வலிப்பு நோயால் உயிருக் குப் போராடிய இளைஞரைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்து நருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேவ கோட்டைக்கு நேற்றுமுன் தினம் இரவு 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. காரைக்குடி நகரைக் கடந்ததும் பேருந்தில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த தனி யார் மருத்துவமனை மருத்து வரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆபத்தான நிலையில் இருந்ததால் 108 ஆம்புலன்சுக்கு ஓட்டுநர் பாண் டியன் தொடர்பு கொண்டார். ஆனால், ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் சிவகங்கைக்குச் சென்றதால் வருவதற்கு தாமத மாகும் எனக் கூறினர்.

இதையடுத்து ஓட்டுநரும், நடத்துநர் மைக்கேலும் போக்கு வரத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு 30 பயணி களையும் வேறு பேருந்தில் ஏற்றி விட்டனர். தொடர்ந்து அரசுப் பேருந்திலேயே சிவக்குமாரை காரைக்குடி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். சிவக்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் காப் பாற்றினர்.

இச்சம்பவம் சமூக வலை தளங்களில் பரவியதால் உயிருக் குப் போராடிய இளைஞரைக் காப் பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x