

2021-ல் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள் ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: வரும் 2020-ம் ஆண்டில் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்குவார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சி யினர், மக்களை அவர் சந்திப்பார்.
2021-ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார். நான் தேர்தலில் போட்டியிட மாட் டேன். குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து கேட்கிறீர்கள். அதுகுறித்து ரஜினிகாந்த் கருத்து கூறுவார் என்றார்.