அண்ணன், தம்பி உட்பட மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

அண்ணன், தம்பி உட்பட மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருவாரூர் அருகே வீட்டை சீர மைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் பேர ளம் அருகே அந்தக்குடி தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலா மணி. இவரது மகன்கள் சதீஷ், இளவரசன்(30), இளையராஜா (25). இவர்களில் இளவரசனும், இளையராஜாவும் நேற்று தங் களின் ஓட்டு வீட்டை சீரமைத்து, தகர சீட்டைப் பயன்படுத்தி மழை நீர் வடிவதற்கான அமைப்பை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த உற வினர் பாரி(45) என்பவரும் இப்பணியில் ஈடுபட்டார்.

அப்போது, வீட்டுக்குச் செல் லும் மின்சார ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தகர சீட் வழியாக மின்சாரம் பாய்ந்து, 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனால் மயங்கி விழுந்த 3 பேரையும் பேரளம் போலீஸார் மீட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை மருத்துவர் கள் பரிசோதித்துவிட்டு, இளவர சன் உள்ளிட்ட 3 பேரும் ஏற்கெ னவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். இதையடுத்து, அவர் களின் உடல்கள் பிரேத பரி சோதனைக்காக அங்கேயே வைக் கப்பட்டன.

இதுகுறித்து பேரளம் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in