ரூ.63 லட்சம் முறைகேடு அரசு வேலையில் சேர போலி நியமன ஆணை: முன்னாள் அரசு ஊழியர் கைது

ரூ.63 லட்சம் முறைகேடு அரசு வேலையில் சேர போலி நியமன ஆணை: முன்னாள் அரசு ஊழியர் கைது

Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அழகர் சாமி நகரைச் சேர்ந்தவர் முத்து. தனது மாமா மகன் மற்றும் மகளுக்கு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில், நண்பர் ஒருவர் மூலம் காரியாபட்டி வி.டி.பாண்டியன் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(38) என்பவர் முத்துவுக்கு அறிமுகமானார்.

இவர் விருதுநகர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வேலையில் இருந்து விலகியவர். இவரது மனைவி ஷீலாலட்சுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ராதாகிருஷ்ணன், தான் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ள தாகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றியதால் தனக்கு அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் முத்துவிடம் கூறினார்.

இதை நம்பி தனக்குத் தெரிந்த உறவினர்கள் 5 பேரின் பிள்ளை களுக்கு அரசு வேலை வாங்கித்தரக் கோரி முத்து ரூ.75 லட்சம் கொடுத்தார். அதன்பின், பல மாதங்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காமல் ராதாகிருஷ்ணன் அலைக்கழித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் 8 பேருக்கு அரசு வேலைக்கான ஆணையை முத்து விடம் ராதாகிருஷ்ணன் கொடுத்தார். அதை ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தபோது 8 பேருக்கான வேலை உத்தரவும் அரசு ஆணைகளும் போலியானவை என்பது தெரிய வந்தது.

இதுபற்றி ராதாகிருஷ்ணனிடம் முத்து கேட்டபோது ரூ.12 லட்சத்தை மட்டும் திருப்பி தந்துள்ளார் ரூ.63 லட்சம் முறை கேடு செய்ததாக ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீஸார், ஷீலா லட்சுமியிடம் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in