

பிட்காயின் முதலீடு எனக் கூறி ரூ.526 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருச்சி மாந கர குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்த ராசு மகன் முருகேசன்(30). இவரை கடந்த ஜூன் மாதம் அதே பகுதியில் உள்ள புலவனார்குடியைச் சேர்ந்த கைலாசம் மகன் கார்த்திக்(38) என்பவர் அணுகி ‘பிட் காயின்’ மல்டி லெவல் ஆன்லைன் மார்க் கெட் திட்டம் குறித்து விளக்கி உள்ளார்.
அப்போது, ‘‘திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ‘பிட் 2 பிடிசி, ஸ்டாக்கிஸ்ட் மார்ட்’ என்ற பெயரிலான நிறுவனம் இயங்கு கிறது. மதுரையைச் சேர்ந்த ராஜ துரை, அவரது மனைவி சுவேதா, டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் கபூர், மத்திப் கபூர், மரியசெல்வம் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். நிறுவன பொறுப்பாள ராக நாமக்கல் மாவட்டம் கொசவம் பட்டி வஉசி நகரைச் சேர்ந்த கந்த சாமி மகன் ரமேஷ்(43) செயல் படுகிறார்.
இந்நிறுவனத்தின் ஏஜென்டு களாக என்னுடன், திருச்சி மாவட் டம் மண்ணச்சநல்லூர் சோழங்க நல்லூர் அருகேயுள்ள வாழ்மால் பாளையத்தைச் சேர்ந்த வீரமலை மகன் குட்டிமணி(35), நடராஜன் மகன் கணேசன்(48), பாலு மகன் தங்கராஜ் (26) ஆகியோர் உள்ள னர்” என கார்த்திக் கூறியுள்ளார்.
மேலும், “இந்நிறுவனத்தில் 10 டாலர் மதிப்பில் ரூ.700 முதலீடு செய்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.50 வரை லாபம் சம்பாதிக்கலாம். ஒரு நபரை அறிமுகப்படுத்தினாலும், தனக்கு கீழ் 2 பேரை சேர்த்துவிட்டாலும், அதற்கென தனியாக நாள் ஒன் றுக்கு ரூ.4,900 வரை சம்பாதிக்க லாம்” எனவும் கூறியுள்ளார். அதனடிப்படையில், முருகேசன் பல தவணைகளாக கார்த்திக் மூலம் இந்நிறுவனத்தில் ரூ.36.40 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படு கிறது.
அதன்பின் இந்நிறுவனம் முருகேசனுக்கு ரூ.5.25 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தில் தான் செலுத்திய தொகையில் மீதமுள்ள ரூ.31.15 லட்சம் மற்றும் கமிஷன் உள்ளிட்ட இதர தொகை களை தராமல் ஏமாற்றிவிட்டதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முருகேசன் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், முருகேசன் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது. இதுகுறித்து மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ரமேஷ், குட்டிமணி, கணேசன், தங்கராஜ் ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுவேதா, மரியசெல்வம், சிம்ரன் கபூர், மந்திப் கபூர் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.
ஏஜென்ட் கணக்கில் ரூ.80 லட்சம்
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: பிட்காயின் - ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பெரியள விலான மோசடியை இக்குழுவினர் நடத்தியுள்ளனர். இதுவரை பலரி டம் இருந்து ரூ.526 கோடி அளவுக்கு இக்கும்பல் மோசடி செய்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்கலாம் என சந்தேகிக்கிறோம். நேரடியாக பணமாக அல்லாமல், ‘வேலட்’ முறையில் பணப் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
இந்த மோசடியை ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களை குறிவைத்து நிகழ்த்தி உள்ளனர். இக்கும்பலின் ஏஜென் டாக செயல்பட்ட குட்டிமணியின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.80 லட்சம் உள்ளது. தற்போது, அந்த கணக்கை முடக்கி வைத்துள்ளோம். மற்றவர்களின் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
முதலீடு செய்யக்கூடாது
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ கூறும் போது, “அரசிடம் முறையான பதிவு பெறாமல் நடத்தப்படும் நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்யக் கூடாது. ஆசைவார்த்தை கூறி ஏமாற்றும் போலியான நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இதுபோன்ற நிறுவனங்களிடம் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக காவல்துறை யினரிடம் புகார் அளிக்கலாம்” என்றார்.
இதற்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி என்ப தால், இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ள தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.