

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி வார்டு மறுவரை யறை, இடஒதுக்கீடு செய்யப் பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தவறான தகவலை அளித்துள்ள தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி உள்ளாட்சி வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர் கள், தலைவர்கள் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திமுகவின் கோரிக்கையை ஏற்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் இட ஒதுக் கீட்டை முழுமையாக நடைமுறைப் படுத்தும்படி வழக்கு தொடரப் பட்டது. அப்போது உயர் நீதி மன்றத்தில் அன்றைய அரசுச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தாக்கல் செய்த பிரமாண பத்திரத் தில், 2001 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித் திருந்தார்.
ஆனால், இப்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் மறுவரையறை செய் யப்பட்டுள்ளதாக தவறான தகவலை உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. தெரிந்த பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
குடியுரிமை திருத்த சட்ட மசோ தாவுக்கு எதிராக மக்களவையில் திமுக வாக்களித்தது. திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுகவின் கருத்தை உறுதியுடன் முன்வைத் துள்ளார். குடியுரிமை சட்டத் துக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.