

சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் செயலாளராக 25 ஆண்டு கள் பணியாற்றிய வி.கே.ஸ்தாணுநாதன் (97), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த ஸ்தாணுநாதன், ரயில்வே துறையில் பணியாற்றினார். மனைவி சுலோச்சனா ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள் ளனர். பணி ஓய்வுக்குப் பிறகு சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டி வந்த ஸ்தாணுநாதன், 1989-ம் ஆண்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித் யாலயா சமிதியின் செயலாளராக பொறுப்பேற்றார். 2014 வரை 25 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்த அவர், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பல் வேறு குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகளை தொடங்கினார். தனது இறுதி மூச்சு வரை மதுவுக்கு எதிராகவும், மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் பிரச்சாரம் செய்து வந்தார். உடல்நலக் குறை வால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்தாணு நாதன், நேற்று முன்தினம் கால மானார். இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தலித் மக்களை அழைத்துச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை வைத்தியநாத அய்யரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகராய நகர் தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு தக்கர்பாபா வித்யாலயா சமிதி தலைவர் எஸ்.பாண்டியன், செயலாளர் பி.மாருதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத் தினர். அவரது உடல் நேற்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.