Published : 12 Dec 2019 09:27 AM
Last Updated : 12 Dec 2019 09:27 AM

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 8 நாட் களுக்கு நடைபெறுகிறது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

இந்தோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் மொத் தம் 55 நாடுகளைச் சேர்ந்த 130-க் கும் மேலான படங்கள் திரையிடப் பட உள்ளன. இதில் தமிழ்ப் படங் களுக்கான போட்டிப் பிரிவில் திரை யிட ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லு கருப்பட்டி’ மற்றும் ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப்படங்களுக்கு சிறப்பு பரிசுகளும் உண்டு.

இந்த திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தங்கப் பனை விருது படம்

விழாவின் தொடக்கவிழா படமாக கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘தி பாராஸைட்’ (Parasite) என்ற கொரிய மொழிப் படம் திரையிடப்படுகிறது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்ய கலாச் சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங் குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளன. தினசரி காலை 9.30 முதல் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கனி மொழிப்படம், ‘ஜாவி தி சீட்’ என்ற அசாமியப் படம், ‘நேதாஜி’ என்ற இருளர் மொழிப் படம் ஆகிய மூன்று படங்கள் முதல் முறையாகத் திரையிடப்பட இருக்கின்றன. விழாவில் ஒரு அங்கமாக தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. அவைகளில் சிறந்த படங்களுக்கு பரிசுகளும் உண்டு.

இன்று மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக் கும் தொடக்கவிழாவில் தமிழக அமைச்சர்கள், திரைப்பட கலைஞர் கள் கலந்துகொண்டு சிறப்பிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x