

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறி யாளர்கள் நேற்று தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற் காக ஆன்லைன் மூலம் கார் வாடகைக்கு எடுத்து, ஒகேனக் கல்லுக்குச் சென்றனர்.
காரை கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லிபன்மதி (23) என்பவர் ஓட்டிச் சென்றார். காரில் 5 பெண் பொறியாளர்கள் உட்பட 12 பேர் பயணம் செய் தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கரடிக் குட்டை என்னுமிடத்தில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் பொறியாளர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட் பூரைச் சேர்ந்த தாம்பவிஜா (22), கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சரேருன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும், கார் ஓட்டுநர் லிபன்மதி, கேரளா மாநிலம் பாலக்காடு சஞ்சய் (23), வயல்நாடு ஆல்வின் (24), திருச்சூர் ஆனந்து (24), பாலக்காடு லியா (23), திருச்சூர் அனந்த்நாராயணன் (22), கோட்டயம் ஜோபின்ஜாய் (23), டோம்தாமஸ் (23), பாலக்காடு ராஜூ (24), கோட்டயம் ஆனந்த் (24) மற்றும் சென்னையைச் சேர்ந்த அம்மு (23) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஓசூர், பெங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.