

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராசேந்திர சோழன் அரியணையேறிய 1000-வது ஆண்டு விழா, சுதந்திர தின விழா ஆகிய விழாக்கள் இந்திய தொல்லியல் துறை சார்பில் நேற்று நடைபெற்றது.
தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பி.வெங்க டேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ‘சோழர்களின் நினைவுச் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை முன் னாள் துணை இயக்குநர் வி.வேதாச்சலம் தொடங்கி வைத் தார். விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிய ருக்கான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.