Published : 11 Dec 2019 10:42 AM
Last Updated : 11 Dec 2019 10:42 AM

உலகம் முழுவதும் செல்லும் கிறிஸ்துமஸ் பொம்மைகள்: நிரந்தர சந்தைவாய்ப்பை ஏற்படுத்த விளாச்சேரி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

மதுரை அருகே விளாச்சேரியில் தயாராகும் கிறிஸ்துமஸ் பொம்மைகள் உலகம் முழுவதும் விற்பனைக்குச் செல்வதால் அந்த மண்ணின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கிறிஸ்துஸ் பண்டிகை டிச.25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தற்போது வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொடங்கவிட்டும், குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தும் பண்டிகையை மக்கள் வரவேற்று வருகின்றனர்.

பண்டிகை நெருங்கி விட்ட தால் மதுரை அருகேயுள்ள விளாச் சேரியில் குடில் பொம்மைகள் தயாரிப்பு இரவு, பகலாக விறு விறுப்பாக நடக்கிறது. இந்தத் தொழிலாளர்களிடம் கிறிஸ்துமஸ் பொம்மைகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் வெளிமாநில வியாபாரிகள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். மதுரை வரும் வெளிநாட்டினரும் விளாச் சேரியைத் தேடிக் கண்டறிந்து கிறிஸ்துமஸ் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

விளாச்சேரி பொம்மைகள் அனைத்தும் இதைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. அதனால், தமிழக அரசு நிரந்தரமாகவே கொலு பொம்மைகள், விநாயகர் பொம்மைகள் மற்றும் கிறிஸ்துமஸ் பொம்மைகளை விற்க சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், இதற்காக இங்கு ஒரு விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க் கின்றனர். பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விளாச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் கூறுகையில், அரை இன்ச்சிலிருந்து ஓர் அடி வரை கிறிஸ்மஸ் பொம்மைகள் தயார் செய்கிறோம். ஒவ்வொன்றும் அதன் அளவைப் பொருத்தே விலை நிர்ணயிக்கிறோம்.

விளாச்சேரியில் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகள், பிள்ளையார் பொம்மைகள், கிறிஸ்துமஸ் பொம்மைகள் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறோம். மொத்தமாக எங்களிடம் கொள்முதல் செய் யும் வியாபாரிகள் அவற்றை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர், என்றார்.

பெண் தொழிலாளி சந்திரவதனம் கூறுகையில், பொம்மை செய்வதற்கு ஏற்றது விளாச்சேரி மண். அதனால்தான் இங்கே பன்னெடுங்காலமாக இதைச் சார்ந்து இங்கே தொழில் வளர்கிறது. இங்கு பொம்மை உற்பத்தியாளராகப் பணி செய்யும் பெண்கள் எல்லோரும் ஒரு குழுவாக இருப்பதால் தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்கிறது. பொம்மைகளைச் சுடுவதற்கு சூளை வசதி செய்து தர வேண்டும். மண்ணைப் பிசைவதற்கு தற்போது இயந்தி ரங்கள் வந்துள்ளன அதையும் அர சாங்கம் வழங்கினால் பேருதவியாக இருக்கும். ஆண்டு முழுவதும் இங்கு வேலை இருப்பதில்லை. பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களுக்கான தேவைகளின் அடிப்படையில்தான் இங்கே வேலை உள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x