

இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடி யுரிமை வழங்க வேண்டும் என்று ‘வாழும் கலை' அமைப்பின் நிறு வனர் ரவிசங்கர், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இந்துக் கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின், புத்த மதத்தி னருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய தமிழக எம்.பி.க்கள், ‘இலங் கையில் பெரும்பான்மை இனத்த வரால் பாதிக்கப்பட்டு இந்தியா வில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங் கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்’ என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கும் 1 லட்சத் துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டு குடிமக்களாகக் கருதாமல் ‘மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்திய குடியுரிமை மசோதா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.