

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரான செவிலியரை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்ட தீட்சிதர் தர்ஷன் ராமேசு வரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜ ரானார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த நவம்பர் 16-ம் தேதி இரவு முக்குறுணி விநாயகர் சன்னதியில் பெண் செவிலியர் ஒருவர் அர்ச்சனை செய்ய வந்தார். அப்போது அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் அர்ச்சனை செய்ய மறுத்து செவிலியரைத் தாக்கினார். இந்தக் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியது. இதுதொடர்பாக தீட்சிதர் மீது, சிதம்பரம் போலீஸார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்த னர்.
இந்த வழக்கில் தன்னைக் காவல் துறையினர் கைது செய் யக் கூடும் எனக் கருதிய தீட்சி தர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீட்சிதர் தர்ஷன் 15 நாட்கள் ராமேசுவரத்தில் தங்கி இருக்க வேண்டும். ராமேசுவரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
ராமநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் முன் கையெ ழுத்திட வேண்டும் என்ற நிபந்த னைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ராமேசு வரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜ ரான தீட்சிதர் தர்ஷன் கையெ ழுத்திட்டுச் சென்றார்.