உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் கூட்டுறவு கடன் நிலுவையில் இருக்க கூடாது? - தேர்தல் அதிகாரிகளின் புது உத்தரவால் வேட்பாளர்கள் குழப்பம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலு வையில் இருக்கக் கூடாது, காவல் நிலையத்தில் வழக்கு இல்லா சான்று பெற வேண்டும் என்ற தேர்தல் அதிகாரிகளின் புதிய உத்தரவால் வேட்பாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோரின் பெயர், அந்தந்த ஊராட்சிக்குரிய ஏதாவ தொரு வார்டு வாக்காளர் பட்டி யலில் இருக்க வேண்டும். அதே போல் ஊராட்சி ஒன்றியக் கவுன் சிலர் பதவிக்குப் போட்டியிடு வோரின் பெயர் அந்த ஒன்றியத்தில் ஏதாவதொரு வார்டு வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.

மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவோரின் பெயர், மாவட்ட ஊரகப் பகுதிகளில் ஏதாவதொரு வார்டு வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். மேலும் வேட்புமனுவுடன் அபிட விட் தாக்கல் செய்ய வேண்டும். அதில் சொத்து, கடன், வங்கிக் கணக்கு, வழக்கு விவரம், கையிருப்புத் தொகை, நகை ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

வருமான வரி

வேட்பாளர் மற்றும் தனது குடும் பத்தினருக்கு வருமான வரி நிரந்தி ரக் கணக்கு எண் இருந்தால் அதன் விவரமும், கடைசியாக வருமான வரி கட்டிய விவரமும் தெரிவிக்க வேண்டும். மேலும் வேட்பாளர், முன் மொழிபவர் ஆகியோரது வாக் காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், போட்டியிடும் பதவி எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் வந்தால் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். கட்சி சின்னம் எனில் படிவம் ‘பி’ தாக்கல் செய்ய வேண் டும்.

மேலும் உள்ளாட்சிக்கு கட்ட வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை நிலுவை தொகை பாக்கி இல்லை என்று சான்று இணைக்க வேண்டும்.

ஆனால் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றி யத் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுவுடன் கூட்டுறவு சங்கத்தில் கடன் பாக்கி இல்லை என்ற சான்று வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வழக்கு விவரம் அபிடவிட்டில் குறிப்பிட்டால் போதும் என்ற நிலையில் காவல் நிலையத்தில் வழக்கு இல்லை என சான்று வாங்க வேண்டுமென, மானாமதுரை ஊராட்சி ஒன்றி யத் தேர்தல் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

தேர்தல் அதிகாரிகளின் புது, புது உத்தரவால் வேட்பாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். வேட் பாளர்கள் சிலர் கூறும்போது, ‘தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதிமுறையை கூறுகின்றனர்.

அவர்களுக்கு முறையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர். தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘விதிமுறையில் குழப்பம் ஏற்பட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை அணுகலாம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in