

தமிழகத்தில் மணல் மாபியா போல தண்ணீர் மாபியாக்களும் அதி கரித்து வருவதாக உயர் நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித் துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோனாம்பேடு கிராம பொதுநல சங்கம் சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப் பட்டிருந்த மனுவில் கூறியிருப்பதா வது:
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராள மான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரி கள் மூலமாக தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் வசிக் கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வரு கிறது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளும் அகற்றப்படாமல் உள் ளன. எனவே கோனாம்பேடு பகுதி களில் உள்ள குளங்களில் தொடர்ச் சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
அறிக்கை தர உத்தரவு
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சம் பந்தப்பட்ட இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது.
தண்ணீர் கிடைக்காது
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் மணல் மாபியா போல தண்ணீர் மாபியாக்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.
மேலும், தமிழகத்தில் தண்ணீரை சேமித்து வைக்க போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. தற்போது சுதாரித்து விழித்துக் கொள்ளவில்லை என்றால் எதிர் கால சந்ததியினருக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.