

தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங் கள், தொழிற்சாலைகள் என சுமார் 2.95 கோடிக்கும் மேற் பட்ட மின்இணைப்புகள் உள்ளன.
தலைநகரான சென்னை யில் மட்டும் தரைக்கு அடியில் மின்கேபிள்கள் பதிக்கப்பட்டு, மின்சாரம் விநி யோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் மின்கம்பங் களை பொருத்தி மின்சார வயர்கள் மூலம் மின்விநியோ கம் செய்யப்படுகிறது.
இயற்கைச் சீற்றங்களின் போது மின்வயர் அறுந்து விழுவதால் மனிதர்கள், கால் நடைகள் உயிரிழக்கும் சம்ப வங்களும் பரவலாக நடக்கின் றன. மின்தடை பிரச் சினைகளும் ஏற்படுகின்றன.
மேலும், துணை மின் நிலையங்களில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு வயர் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும்போது மின் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தரைக்கு அடியில் மின் கேபிள்களை பதித்து மின் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்யப் பட்டு தரைவழி மின்கேபிள் கள் பதிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, ரூ.60 கோடி மதிப்பில், 400 கி.மீ. நீளத் துக்கு அலுமினிய மின்கேபிள் கள் வாங்க திட்டமிடப் பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.