

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படு வதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் இதை தடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங் களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு இரு கட்டங்களாக தேர் தல் நடத்தப்பட உள்ளது. வரும் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தற்போது வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங் கள் ஏலமிடப்படுவதாக நாளிதழ் களில் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், “சட்டத்துக்கும் மக் களாட்சி தத்துவத்துக்கும் புறம் பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வு களுக்கு ஊறு விளைவிக்கும் செயல். எனவே, ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதனை மக்கள் உணரச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் நாளான நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,456 பேரும், கிராம ஊராட்சி தலை வருக்கு 288 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 38 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 2 பேரும் என நேற்று மட்டும் 1,784 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 2 நாட் களும் சேர்த்து 5,001 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.