

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியை அடுத்த இளங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் ‘தாகபூமி’ என்ற குறும் படத்தைத் தயாரித்தேன். அந்தப் படத்தை வெளியிட காத்திருந்த நிலையில், என் கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ‘கத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார்.
இதற்கு இழப்பீடு வழங்க இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு உத்தர விடக்கோரி தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-ல் உரிமையியல் வழக்குத் தாக் கல் செய்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதே பிரச்சினைக்காக ராஜசேகர் தஞ்சை நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு களை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், நடிகர் விஜய், திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர்.
அதில் `கத்தி' திரைப்படத்துக் கும், ‘தாகபூமி’ என்ற குறும்படத் துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தஞ்சாவூரில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை மையமாக வைத்து `கத்தி' திரைப்படம் எடுக்கப்பட்டது. பொதுவான ஒரு சம்பவத்தை வைத்து திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
ராஜசேகர் 2013-ல் இயக்குநர் முருகதாசிடம் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முருகதாஸ் மறுத்ததால் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். எனவே, தஞ்சை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எங்கள் மீதான வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் விளம்பரம் பெறும் நோக்கத்தில் ராஜசேகர் தஞ்சை நீதிமன்றத்தில் உரிமை யியல் வழக்குத் தொடர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, வழக்கை விசாரிக்கும் தஞ்சாவூர் நீதிபதி `கத்தி' திரைப்படத்தையும், ‘தாகபூமி’ குறும்படத்தையும் பார்க்க வேண்டும். அதன் பிறகு புகார்தாரர் கூறும் ஒற்றுமையிருந் தால் பின்னர் விசாரணை நடத் தலாம். படத்தின் இயக்குநர் முருக தாசை மட்டும் எதிர்மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க வேண்டும்.
கீழமை நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கில் எதிர் மனுதாரர் களாகச் சேர்க்கப்பட்டுள்ள லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீல்கண்ட நாராயணன், இயக்குநர்கள் கரு ணாமூர்த்தி சுபாஸ்கரன், ஒளிப் பதிவாளர் ஜார்ஜ் சி வில்லி யம்ஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் வழக்கிலிருந்து விடு விக்கப்படுகின்றனர், என உத்தர விட்டார்.