இந்திய நாட்டிய விழா 21-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடக்கம்: சுற்றுலாத்துறை அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சி, வரும் 21-ம் தேதி கடற்கரை கோயில் வளாகத்தில் தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் இந்திய நாட்டிய விழா, கடற்கரை கோயில் வளாகத்தில் ஒருமாதம் நடைபெறும். இதில், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை, வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் அரங்கேற்றுவர். இதனை, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் 24-வது இந்திய நாட்டிய விழா வரும் 21-ம் தேதி மாலை தொடங்கப்பட உள்ளது. இதற்காக, கடற்கரை கோயில் வளாகத்தில் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள், கலை நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் தயார் செய்யும் பணிகளை சுற்றுலாத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால், இம்மாத இறுதி முதல் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரையில் கடற்கரை கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டிருக்கும் என உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in