

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:
“ குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் பகுதியில் 2.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொலஞ்சல் மற்றும் புலிகாட் பகுதியில் கடலில் தொலைதூர காரணங்களால் ஏற்படும் அலை வீசுவதால் காற்று பலமாக வீசும் மற்றும் அலைகள் 2 முதல் 3 , 4 அடி வரை உயரம் வரக்கூடும். அதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்க வேண்டாம்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.