

லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகன், சுரேஷ் உள்ளிட்டோர் மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கோட்டை போலீஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன்(34), பிரபல கொள் ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி(57), மதுரை தெத்தூர் மேட்டுப்பட்டி கணேசன்(35) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10.800 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு 11-வது சிவில் சிட்டி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களை திருச்சி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது சுரேஷிடம் இருந்து 1.499 கிலோ, முருகனிடமிருந்து 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர பெங்களூரு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது, லலிதா ஜூவல்லரியில் கொள்ளை யடிக்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகளை முருகனிடமிருந்து மீட்டு, திருச்சி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் மூலமாக விரைவில் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென காவல் உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள் ளனர். அதனடிப்படையில் காவல் நிலைய அளவிலான விசார ணையை இத்துடன் முடித்துக் கொண்டு, இவ்வழக்கின் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுவிட்டனர். கொள்ளைபோன நகைகளிலும் பெரும்பகுதி மீட்கப்பட்டுவிட்டது. கொள்ளைக்குப் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டு விட்டன. தண்டனை பெற்றுத் தரக்கூடிய அளவிலான சாட்சியங் களும் தயாராக உள்ளன. எனவே இவ்வழக்கில் முருகன், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி, கணேசன் ஆகியோரின் பங்க ளிப்பு, அவர்களின் வாக்குமூலம், அவர்கள் செய்த குற்றத்தை நிரூ பணம் செய்வதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவான குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முழுமை பெற்றதும் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்படும். இவ்வழக்கில் தொடர் புடைய முருகன் உள்ளிட்ட அனை வருக்கும் நிச்சயமாக அதிக பட்ச தண்டனை பெற்றுத் தரும் வகையில், தேவையான ஆதாரங் களுடன் கூடியதாக இந்த குற்றப் பத்திரிக்கை இருக்கும்” என்றனர்.