

செங்கல்பட்டு மற்றும் காஞ்சி புரம் மாவட்ட பகுதிகளில் சமீப காலமாக துப்பாக்கிப் புழக்கம் அதிகரித்து வருதை அப்பகுதி யில் நடந்த இரு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இந்த துப்பாக்கி புழக்கத்தை கண்டு பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த நெல்லிக் குப்பம் கிராமத்தில் விமல்சந்த் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று முன் தினம் இரவு கடையில் கணக்கு களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, முகமூடி அணிந்த 3 நபர்கள் கடையினுள் நுழைந்து, துப்பாக்கியை காட்டி விமல்சந்த்தை மிரட்டியுள்ளனர்.
அப்போது, விமல்சந்த் சாதுர்ய மாக செயல்பட்டு கடையில் இருந்த எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க செய்தார். அலார சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதைக் கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்த காயார் போலீ ஸார், கொள்ளை முயற்சி தொடர் பாக வழக்குப்பதிவு செய்து, அடகுக் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
புறநகர் பகுதியான தாழம் பூரை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள சாந்தி நகர் குடியிருப்பு ஒன்றில் கடந்த மாதம் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுடப்பட்டு கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், புறநகர் பகுதியில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பது கண்டு இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் கூறியதாவது: நெல்லிக்குப்பம் சம்பவம் தொடர்பாக காயார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிப்ப தற்கான நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறோம் என்றார்.விஜய்யிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், புறநகர் பகுதியில் உள்ள ரவுடிகளிடம் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.