

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோ சனை நடத்தினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட் டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேற்று நடந்தது. தேமுதிக பொருளா ளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் மற்றும் 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
வெற்றி வாய்ப்புள்ள இடங்கள்
தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களையும் விஜயகாந்த் தனியாக அழைத்துப் பேசினார்.
இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘தேமுதிகவை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேமுதிகவுக்கு சாதகமாகவும், அதிக வெற்றி வாய்ப்புள்ள இடங் களின் பட்டியலையும் வழங்கி யுள்ளோம்.
அதை வைத்து அதிமுகவிடம் இருந்து தேமுதிகவுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர் களை சந்தித்து பேசும்போது, தேமுதிகவுக்கு சாதகமான இடங் களை கேட்க வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது’’ என்றனர்.