ஓய்வூதியம் கோரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு 

ஓய்வூதியம் கோரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு 
Updated on
1 min read

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை பெற விண்ணப் பித்தவர்களின் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குபட்டியைச் சேர்ந்தவர் எஸ்.சித்ரா. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளியாகிய நான் 2013-ம் ஆண்டு மார்ச் முதல் முதியோர் ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 பெற்று வந்தேன். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வூதியத் தொகை வரவில்லை. தாசில்தாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதற்காக நிறுத்தப்பட்டது என்ற காரணத்தையும் கூறவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட் டறிந்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனித உரிமை மீறல் நடை பெற்று இருப்பது உறுதி செய்யப் பட்டதால் முதியோர் உதவித் தொகை கிடைக்காமல் பாதிக்கப் பட்ட எஸ்.சித்ராவுக்கு 4 வாரத்துக் குள் தமிழக அரசு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

சித்ரா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கணக்கிட்டு இதுவரை வழங்காத ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.

இதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளி களுக்கான ஓய்வூதியம் மற்றும் முதியார் ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பித்தவர்களின் விண் ணப்பத்தை குறிப்பிட்ட காலத்துக் குள் பரிசீலிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து, விண்ணப் பத்தின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக் கும் வருவாய்த் துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in