Published : 10 Dec 2019 08:38 AM
Last Updated : 10 Dec 2019 08:38 AM

வெளிச்சந்தை விற்பனைக்காக 300 டன் எகிப்து வெங்காயம் தமிழகத்தில் இறக்குமதி: திருச்சியில் கிலோ ரூ.100-க்கு விற்பனை

திருச்சி வெங்காய மண்டியில் பெரிய வெங்காயத்தை ரக வாரியாக பிரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

வெளிச்சந்தை விற்பனைக்காக எகிப்து நாட்டில் இருந்து தமிழகத் துக்கு முதல்கட்டமாக நேற்று 300 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சியில் வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

வெங்காயம் விலையேற்றம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்கு மதி செய்யவும், உள்நாட்டில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும், பதுக்குவதற்கும் தடை விதித்து மத்திய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி வெங்காய மண்டியில், கடந்த ஒரு மாதமாக வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 7-ம் தேதி நிலவரப்படி பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், வெங்காயத் துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போக்க முதல் கட்டமாக எகிப்து நாட்டில் இருந்து மும்பைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. அங்கிருந்து 3 லாரி களில் 30 டன் வெங்காயம் நேற்று திருச்சி வெங்காய மண்டிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெங் காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 குறைந்ததால், வெங்காய மொத்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எகிப்து, கர்நாடகா வெங்காயம்

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகச் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழ கத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய வைதான் பெரிய அளவு வெங்காயம் வர்த்தகம் நடைபெறும் ஊர்கள். இதில், திருச்சிக்கு மும்பை வழியா கவும், திண்டுக்கல்லுக்கு தூத்துக் குடி வழியாகவும் பெரிய வெங் காயம் வந்துள்ளது. இன்று மட்டும் (டிச.9) தமிழகத்துக்கு 300 டன் எகிப்து வெங்காயம் வந்துள்ளது. எகிப்தில் இருந்து வந்துள்ள வெங் காயம் தரமானதாகவும் ஒரு வெங் காயம் 100 முதல் 200 கிராம் வரை எடை கொண்டதாகவும் உள்ளது.

வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக மொத்த விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த 7-ம் தேதி நடுத் தர வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று (டிச.9) கிலோ ரூ.100 ஆக குறைந்துள்ளது. விலை உயர்வு காரணமாக வெங்காயம் வாங்க மக்களிடம் ஆர்வம் குறைவாக உள் ளது. மேலும் விலை குறைய வாய்ப் புள்ளது என நினைத்து சில்லறை வியாபாரிகள் வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு (டிச.9) 150 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இதன் விலை, தரத்துக்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெரம்பலூர், துறையூர் ஆகிய இடங்களில் இருந்து சின்ன வெங்காயமும் வந்துள்ளது. இது, கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் வெங்காயத் தின் விலை பழைய நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது என்றார்.

விலை மேலும் குறையலாம்

எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து மத்திய அரசு 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளது, இந்த வெங்காயம் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலை யில் விற்பனை செய்யப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெளிச்சந்தை விற்பனைக்காக தமிழகத்துக்கு நேற்று 300 டன் எகிப்து வெங்காயம் முக்கிய ஊர்களின் வெங்காய மண்டிகளுக்கு வந்துள்ளதாக வெங் காய வர்த்தகர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

வெளிச்சந்தையில் மேலும் வெங்காயம் இறக்குமதி செய்யப் படும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x