Published : 09 Dec 2019 11:04 AM
Last Updated : 09 Dec 2019 11:04 AM

தமிழகத்தில் புதிய தலைமைக்கு எனது உதவி இருக்கும்: சதாபிஷேக விழாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேச்சு

தமிழகத்துக்குப் புதிய தலைமை வரும். அதற்கு எனது உதவி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேசினார்.

பாஜகவின் மூத்த தலைவர் களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எம்பியின் 80-வது பிறந்த நாளையொட்டி மதுரையில் சதா பிஷேக விழா நடத்த விராத் ஹிந் துஸ்தான் சங்கம் ஏற்பாடு செய்தி ருந்தது. தமிழ்நாடு தொழில் வர்த் தக சங்கத்தில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேசியதாவது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மக்களின் டிஎன்ஏ வும் ஒன்றுதான். இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக பாடப் புத்தகத்தில் விரைவில் இடம் பெறும். பாஜக ஆட்சியில் இதை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.

முத்துராமலிங்கத் தேவர் சொன்ன தேசியமும், தெய்வீகமும் தான் நமது கொள்கை. ஜனநாய கத்தை உடைக்க முயன்ற இந்திரா காந்தியை இந்திய மக்கள் புறக் கணித்தனர். கருணாநிதியோடு பேசுவது, அவரது வாதத் திறமை பிடிக்கும். கருணாநிதி, உதயசூரி யன் என்பது தமிழ்ப் பெயர்கள் அல்ல. அது சமஸ்கிருதப் பெயர் என அவரிடமே சொல்லியிருக்கிறேன்.

தமிழில் 40 சதவீதம் சமஸ்கிரு தம் உள்ளது. ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயேர்களால் ஏற்படுத்தப் பட்ட சதியே தமிழ் சமஸ்கிருதம் விவாதம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் அதிகரிக்கி றது. மதுரை விமான நிலையத்துக்கு கட்டாயம் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும்.

மதுரையில் வளர்ச்சி இல்லை. நெல்லை முதல் மதுரை வரை மெட்ரோ ரயில் சேவை வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அது நடை பெறவில்லை. மதுரையில் பொரு ளாதார மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும்.

அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்காத நிலையில், ஊழலை ஒழிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றேன். 2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார். ஜாமீனில் வெளியில் வருவதை தலைவர்கள் பெருமை யாகக் கருதுகின்றனர்.

தமிழகத்துக் குப் புதிய தலைமை வரும். அதற்கு எனது உதவி இருக்கும். மதுரையை சீர் செய்வதே எனது ஆசை. அதை நிறைவேற்றுவேன். வரும் தேர்தலில் மதுரை அல்லது தமிழகத்தில் எங்காவது போட்டியிடு வேன். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் விராத் ஹிந்துஸ் தான் சங்க மாவட்டத் தலைவர் சசி குமார், பாஜகவினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x