ரஜினியின் அறிவிப்பு கமலுக்குதான் ஏமாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ரஜினியின் அறிவிப்பு கமலுக்குதான் ஏமாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
Updated on
1 min read

உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை என்ற ரஜினி மக்கள் மன்ற அறிவிப்பு கமலுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை யில், ‘‘தமிழகத்தில் நடைபெற இருக் கும் உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில் ரஜினிகாந்த், யாருக்கும் ஆதரவு கொடுக்க வில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றம் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்ற கோடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப் பியபோது, “2021-ம் ஆண்டு நடை பெறும் சட்டப்பேரவைத் தேர்தலி லும் இதையே தான் ரஜினி கூறுவார்.

இதே பல்லவியைத்தான் பாடுவார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவருடன் இணைந்து செயல்பட இருந்த கமலுக்கு தான் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் கொடுக்கும்’’ என்று பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in