

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் விமானம் 77 பயணிகளுடன் இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது வலது பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விமானம் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விமானி விமானத்தை மெதுவாக இயக்கி புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தினார். விமானத்தில் இருந்து பயணிகளை அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பிறகு மாற்று விமானத்தில் பயணிகள் அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.